அமாவாசை
வான மண்டலத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் அளவை திதி” என்கிறோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் (ஒரே நேர் கோட்டில் அமையும்) நாளில் மூதாதையர்களுக்கு ‘திதி” கொடுப்பதும், (அன்று சூரிய சந்திரர்கள் ஒரே டிகிரியில் இணைத்திருப்பார்கள்) பௌர்ணமியன்று சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது. (அன்று சூரிய சந்திரர்கள் சம சப்தமமாக இருப்பார்கள்)
அமாவாசையில் சூரியனுடன் 0 டிகிரியில் இணைந்த சந்திரன் தினமும் 12 டிகிரி நகர்ந்து 15 நாளான பௌர்ணமி அன்று 180ம் டிகிரியை அடைகிறது. சூரியனுக்கு சம சப்தமமாகி முழுமையான ஆகர்ஷண சக்தியை (புவியீர்ப்பு) வெளிப்படுத்துகிறது. அதனால் அன்று செய்யும் பூஜைகள், வழிபாடுகள் சிறப்பை; பெறுகின்றன.