பங்குனி உத்திரத்தின் பெருமை
பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். திருமணமாகாத இரு பாலாரும் இந்நாளில் விரதமிருந்து வழிபடின் திருமணபேறு கிட்டும். புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விபரிக்கப்படுகின்றது.
மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருமணம்
பார்வதி - பரமேஸ்வரர் திருமணம்
சீதாதேவி - ஸ்ரீ ராமர் திருமணம்
இந்திராணி - தேவேந்திரன் திருமணம்
இருபத்தேழு நட்சத்திரம் - சந்திரன் திருமணம்
நம்பியின் மகளான ஸ்ரீ வள்ளி அவதரித்தது. இறைவனால் எரிக்கப்பட்ட மன்மதன் உயிர்பெற்றது. மஹாலெட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது. ஸ்ரீ சரஸ்வதி பிரம்ம தேவனின் வாக்கில் அமர்ந்தது. பாண்டவரில் ஒருவரான அர்ச்சுனன் அவதரித்தது. ஸ்ரீ நந்தியெம்பகவானின் திருமணம் திருமழுபாடியில் நிகழ்ந்தது.